MARC காட்சி

Back
ஆவூர் குடைவரைக்கோயில்
245 : _ _ |a ஆவூர் குடைவரைக்கோயில் -
300 : _ _ |a குடைவரைக் கோயில்
500 : _ _ |a

          தமிழகத்தில் உள்ள குடைவரைக்கோயில்கள் பட்டியலில் விட்டுப்போன குடைவரைதான் ஆவூர் குகை வரதராஜர் கோயில் குடைவரை. திருவண்ணாமலை – விழுப்புரம் நெடுஞ்சாலையில் 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது ஆவூர் கிராமம், இக்கிராமத்தில் ஊருக்கு நடுவே மிக நேர்த்தியாக கட்டப்பட்ட மதிலுக்குள் சிறிய பாறை ஒன்றின் நடுவே குடையப்பட்டுள்ளது இக்கோயில். மேற்கு பார்த்த இக்குடைவரைகோயில் மீது தற்கால விமானம் எழுப்பப்பட்டு அதன் தொன்மை மறைந்துவிட்டது. எனினும் குடைவரையில் உள்ள அழகிய பெருமாளை பார்த்து தரிசிக்கலாம். இக்குடைவரை கோயில் அமைந்துள்ள பாறையின் மீது 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் இராஜராஜன் காலத்திய கல்வெட்டு உள்ளது. இதில் பெண்ணை வடகரை செங்குன்ற நாட்டு ஆவூர் கருமாணிக்கத்தாழ்வார் கோயிலுக்கு எயிலுடையான் தேவன் எனபவர் 1000 குழி புஞ்சை நிலத்தை தானமாக கொடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இக்குடைவரையின் அமைப்பினை நோக்கும் இது 8 ஆம் நூற்றாண்டினதாக கொள்ளலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இக்கோயில் முன்னொரு காலத்தில் படையெடுப்பால் அழிக்கப்பட்டதாலும் அதன்பின்னர் இக்கோயிலை பராமரிக்கப்படாமல் விட்டதால் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட மதில்சுவர்கள், மண்டபங்கள் இடிந்து விழுந்துள்ளது.

520 : _ _ |a

         திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள இக்குடைவரையின் காலம் அதன் அமைப்பை நோக்குகையில் கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். எனவே பல்லவர் காலத்தின் பிற்பகுதியில் எடுக்கப்பட்டிருக்கலாம்.

653 : _ _ |a குடைவரை, கோயில், குகைக் கோயில், குடவரை, ஆவூர், திருவண்ணாமலை, வரதராஜர் கோயில், தொண்டை மண்டல குடைவரைகள், பல்லவர்
710 : _ _ |a திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்
752 : _ _ |a ஆவூர் |c ஆவூர் |d திருவண்ணாமலை |f திருவண்ணாமலை
906 : _ _ |a கி.பி.13-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 12.1296088
915 : _ _ |a 79.2077514
934 : _ _ |a திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில், தானிப்பாடி நடுகல், செஞ்சி கோட்டை, மோதூர் தாய்த் தெய்வக்கல்
995 : _ _ |a TVA_MON_00033
barcode : TVA_MON_00033
book category : குடைவரைக் கோயில்கள்
cover :
Primary File :

TVA_MON_00033_ஆவூர்_குடைவரைக்கோயில்_பெருமாள்-0001.jpg

TVA_MON_00033_ஆவூர்_குடைவரைக்கோயில்_கல்வெட்டு-0002.jpg

TVA_MON_00033_ஆவூர்_குடைவரைக்கோயில்_மண்டபம்-0003.jpg

TVA_MON_00033_ஆவூர்_குடைவரைக்கோயில_மதில்சுவர்-0004.jpg

TVA_MON_00033_ஆவூர்_குடைவரைக்கோயில்_சுவர்-0005.jpg

TVA_MON_00033_ஆவூர்_குடைவரைக்கோயில்_சுவர்-0006.jpg